கஞ்சா பயன்பாட்டிற்கு தடை இல்லை? - ஜோ பைடன் அரசு முன்மொழிவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையிலான அரசு கஞ்சா குறைவான ஆபத்துக்கொண்ட போதைப்பொருளாக மறுவகைப்படுத்த முன்மொழிந்துள்ளது.
ஜோ பைடன் அரசு முன்மொழிவு
அமெரிக்காவை பொறுத்தளவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.
இந்த அனைத்து பொருட்களும் அதிக ஆபத்துக்கொண்ட பொருட்களாகவும், இதை பயன்படுத்துதல் மற்றும் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக்கூடிய தண்டனையும் அமெரிக்காவில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையிலான அரசு கஞ்சா குறைவான ஆபத்துக்கொண்ட போதைப் பொருள் என மறுவகைப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், "வெறும் கஞ்சாவை (marijuana) பயன்படுத்தியதற்காக அல்லது வைத்திருந்ததற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்" எனவும் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவில் கஞ்சா (marijuana) பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |