டிரம்ப் நிர்வாகத்தின் மீது அமெரிக்க மக்கள் அதிருப்தி: புதிய கருத்து கணிப்பு முடிவுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக செயல்பாடுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக புதிய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.
டிரம்ப் மீதான அதிருப்தி
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு அவரது ஆட்சி முறை மற்றும் செயல்பாடுகள் குறித்து கிட்டத்தட்ட 54 சதவீதம் பேர் அதிருப்தியில் இருப்பதாக பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டிரம்பின் பொருளாதார கொள்கைகள் குறித்து மக்களிடம் நிலவும் நிலையற்ற தன்மையே இந்த அதிருப்திக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் பொருளாதார அணுகுமுறைகள் மீதான ஆதரவை வீட எதிர்ப்புக்கு 10 புள்ளிகள் அதிகமாக வந்து இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு மற்றும் நாட்டின் பணவீக்கம் ஆகியவற்றில் டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 17 புள்ளிகள் அதிகமாக வந்துள்ளது.
மேலும் தற்போதைய நாட்டின் பொருளாதார சூழ் நிலைக்கு யார் காரணம் என கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்பின் கொள்கைகள் தான் காரணம் என்று 58% பேரும், முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் தான் காரணம் என்று 31% பேரும் கருதுகின்றனர்.
அத்துடன் டிரம்ப் நிர்வாகம், சுகாதாரத்தில் 21 புள்ளிகள் எதிராகவும், உக்ரைன் போர் விவகாரத்தில் 14 புள்ளிகள் எதிராகவும், சுங்க வரி கொள்கைகளில் 10 புள்ளிகள் எதிராகவும் பெற்றிருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து கணிப்பு முறை
டிரம்ப் நிர்வாக செயல்பாடு குறித்து நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்புகள் 2026 ஜனவரி 8 முதல் ஜனவரி 13ம் திகதி வரை பல்வேறு பகுதியைச் சேர்ந்த 1500 பதிவு செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவில் மதிப்பீடுகள் 2.5 % புள்ளிகள் வரை வேறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |