போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராப் பாடகருக்கு 6 ஆண்டுகள் சிறை
அமெரிக்க ராப்பர் ஃபெட்டி வாப் (Fetty Wap) போதைப்பொருள் கடத்தலுக்காக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
அமெரிக்கா முழுவதும் போதைப்பொருள் கடத்தியதற்காக அமெரிக்க ராப் இசைக்கலைஞர் ஃபெட்டி வாப்புக்கு புதன்கிழமை ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Trap Queen பாடல் மூலம் பிரபலமான ராப் பாடகர் வில்லி ஜூனியர் மேக்ஸ்வெல் II (Willie Junior Maxwell) கோகோயின் விநியோகம் செய்ததாகவும் மற்றும் வைத்திருந்ததாகவும் கடந்த ஆண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
Getty Images
ஜூன் 2019 மற்றும் ஜூன் 2020-க்கு இடையில் லாங் ஐலேண்ட் மற்றும் நியூ ஜெர்சி முழுவதும் 100 கிலோகிராம் கோகோயின், ஹெராயின், ஃபெண்டானில் மற்றும் கிராக் கோகோயின் ஆகியவற்றை விநியோகித்த ஆறு பேர் கொண்ட வளையத்தில் அவர் ஒரு பகுதியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது போதிப்போருள் கடத்தல் குழுவினர் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் போதைப்பொருளைப் பெற்று, நியூயார்க்கிற்கு கொண்டு செல்ல அமெரிக்க தபால் சேவை மற்றும் மறைக்கப்பட்ட பெட்டிகளுடன் வாகன ஓட்டுநர்களைப் பயன்படுத்தினர்.
பொருட்கள் பின்னர் லாங் ஐலண்ட் மற்றும் நியூ ஜெர்சியில் வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
AFP
ஒரு இசை விழாவில் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுகொண்டிருந்த நிலையில், ராப்பர் Fetty Wap அக்டோபர் 2021-ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸில் உள்ள சிட்டி ஃபீல்ட் பேஸ்பால் மைதானத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரது விசாரணையின் போது சுமார் $1.5 மில்லியன் ரொக்கம், 16 கிலோகிராம் கோகோயின், இரண்டு கிலோகிராம் ஹெராயின், ஏராளமான ஃபெண்டானில் மாத்திரைகள் மற்றும் பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
மேக்ஸ்வெல் ஐந்தாண்டுகளுக்கு பிந்தைய வெளியீட்டு மேற்பார்வைக்கு (post-release supervision) உட்படுத்தப்படுவார் என்று நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்தின் அமெரிக்க வழக்கறிஞர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
Hot97