உக்ரைனுக்கான ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு திருப்பி விடும் அமெரிக்கா: அதிர்ச்சியில் ஜெலென்ஸ்கி
உக்ரைனுக்கான ஆயுதங்களை மத்திய கிழக்கிற்கு மாற்றி விட அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராணுவ ஆயுதங்கள் ஒதுக்கீட்டில் முக்கிய மாற்றம்
மத்திய கிழக்கில் ஈரானுடனான போர் நடைமுறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தங்களது ஆயுத கையிருப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி, பிராந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக பென்டகன் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் உக்ரைனுக்கு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இராணுவ தளவாடங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி விடுவது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக உக்ரைன், மத்திய கிழக்கு ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் தற்போது வான் பாதுகாப்பு அமைப்பு தேவைப்படும் நிலையில், உக்ரைனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடைமறிப்பு ஏவுகணைகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருப்பி விடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பென்டகனின் புதிய முயற்சி

அடுத்தடுத்த போர் நடவடிக்கைகள் காரணமாக குறைந்து வரும் ஆயுத கையிருப்பை சமாளிக்க உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க பென்டகன் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பென்டகன் இந்த வாரத்தின் தொடக்கத்தில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில், THAAD ஏவுகணைக்கான Seeker பாகங்களை அதிக அளவு உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |