ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்து: 6 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பத்திரமாக தரையிறங்கிய KC-135 விமானம்
அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானம் விபத்து
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 6 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 12ம் திகதி மதியம் 2 மணியளவில் KC-135 ஸ்ட்ரேட்டோடாங்கர் ரகத்தை சேர்ந்த எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை வாரியம்(CENTCOM) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படையான “இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு” அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானத்தை வீழ்த்தி இருப்பதாக உரிமை கோரியுள்ளது.
ஆனால், முதல் கட்ட விசாரணையில் ரிபொருள் நிரப்பும் விமானம் எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது தவறான துப்பாக்கிச் சூட்டினாலோ நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இதற்கு முன்பும் இது போன்ற போலியான உரிமை கோரலை நடத்திய வரலாறு இருப்பதால், அமெரிக்கா அதிகாரிகள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் கூடி, தொழில்நுட்ப கோளாறு மற்றும் பிற காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த விபத்தின் போது அருகில் இருந்த மற்றொரு KC-135 விமானம் பத்திரமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 6 வீரர்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பிறகே அமெரிக்க ராணுவ விதிமுறைகளின் படி, வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |