ஆணுறையை வைத்து மைக்-கை பாதுகாத்த அமெரிக்க பெண் நிருபர்: வைரல் வீடியோ!
புயல் மற்றும் மழை நீரில் இருந்து மைக்கை பாதுகாக்க ஆணுறை-யை பயன்படுத்திய அமெரிக்க நிருபர்.
இணையத்தில் தீயாய் பரவும் நிருபரின் இன்ஸ்டாகிராம் விளக்க வீடியோ.
அமெரிக்காவில் ஆணுறை-யை கொண்டு மழையில் இருந்து மைக்கை பாதுகாத்த கைலா காலர் செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கலிபோர்னியா ஆகிய மாகணங்களை (hurricane lan) சூறாவளி பலமாக தாக்கியதுடன், சுமார் 2 மில்லியன் மக்களை மின்சாரம் கிடைக்கப்பெறாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியது.
இந்த நிலையில் புயல் பாதிப்புகள் குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க செய்தி நிறுவனத்தின் (NBC2) நிருபர் கைலா காலர் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Florida reporter defends putting condom on mic during Hurricane Ian broadcast pic.twitter.com/s4txv1BLhx
— HARD FACTOR (@HardFactorNews) September 28, 2022
அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்ற கைலா காலர்(Kyla Galer), ஆணுறை-யை கொண்டு அவரது மைக்-கை(microphone) மழை நீர் மற்றும் புயல் காற்றில் இருந்து பாதுகாத்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் விளக்கம் ஒன்றினையும் வழங்கியுள்ளார், அதில் “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் இது” இது ஆணுறை, இது எனது மைக்கை மழை நீர் மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது” என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 5000 முதல் 5500 ரஷ்ய வீரர்களை சுற்றி வளைத்தது உக்ரைனிய படை: முக்கிய நகரை விடுவித்து அசத்தல்!
கைலா காலரின் இந்த வீடியோ தற்போது அதிகமாக பரப்பபட்டு வருவதுடன், இணைய வாசிகள் இது தொடர்பாக மீம்ஸ்களை அதிகமாக பதிவிட்டு வருகின்றனர்.
Instagram