100-க்கும் மேற்பட்ட இந்திய தொல்பொருட்களை திருப்பி கொடுத்த அமெரிக்கா!
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பின், பல ஆண்டுகளாக, இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்களை, அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.
அமெரிக்க கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆகியோர் 105 கலைப்பொருட்களை இந்திய தூதர் தரன்ஜீத் சிங்கிடம் ஒப்படைத்தனர்.
2 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் இதில் அடங்கும். இவை டெரகோட்டா, கல், உலோகம் மற்றும் மரத்தினால் செய்யப்பட்டவை. பெரும்பாலான கலைப்பொருட்கள் இந்து, பௌத்தம் மற்றும் ஜைன மதத்துடன் தொடர்புடையவை.
இவை இந்திய மக்களின் தொல்பொருட்கள் மட்டுமின்றி இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் சின்னமாகவும் உள்ளது என இந்திய தூதர் தரன்ஜீத் சிங் சந்து நன்றி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |