இந்த காரணத்திற்காக ரஷ்யாவை நம்பியிருக்கிறது இந்தியா! விமர்சிக்கும் அமெரிக்கா
இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டு மாத காலமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், பென்டகனின் பத்திரிகை செயலாளர் ஜான் கிர்பி பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு குறித்து பேசினார்.
அப்போது, 'இந்தியா மற்றும் பிற நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை மற்றும் ஊக்கப்படுத்தவுமில்லை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். அதே சமயம், இந்தியாவுடன் நாங்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு கூட்டாண்மையையும் மதிக்கிறோம்.
ஒரு வாரத்திற்கு முன் நிரூபிக்கப்பட்டதைப் போல இது தொடரும். ஏனெனில் இது கவனிக்கப்பட வேண்டியது மட்டுமின்றி முக்கியமானது. இந்தியா பிராந்தியத்தில் பாதுகாப்பை வழங்குபவராக உள்ளதை நாங்கள் மதிக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.