ரஷ்யாவிற்கு உதவிய இந்திய நிறுவனங்கள் உட்பட 398 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ரஷ்யாவிற்கு போர் பொருட்களை வழங்கிய இந்தியா, சீனா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் 19 நிறுவனங்கள் உட்பட ரஷ்யா, சீனா, மலேசியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 398 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
பிப்ரவரி 2022-இல் உக்ரைன் மீதான படையெடுப்பிலிருந்து இந்த நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு உபகரணங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது, இதை ரஷ்யா போரில் பயன்படுத்துகிறது.
இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை மின்னணு கூறுகளின் சப்ளையர்கள், சில நிறுவனங்கள் விமான பாகங்கள், இயந்திர கருவிகள் போன்றவற்றையும் வழங்குகின்றன.
இதற்கு இந்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
வெளியுறவு, கருவூலம் மற்றும் வர்த்தகத் துறைகள் இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அமெரிக்கா ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் பல மூத்த அதிகாரிகள் மீதும் இராஜதந்திர தடைகளை சுமத்தியுள்ளது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்த தடையின் நோக்கம் மூன்றாம் தரப்பு நாடுகளை தண்டிப்பதாகும்.
இந்திய நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
அமெரிக்க வெளியுறவுத்துறை 120 நிறுவனங்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு நிறுவனங்களும் அடங்கும். அவற்றின் மீதான குற்றச்சாட்டுகளின் விவரங்களையும் அது தருகிறது.
இந்த நான்கு நிறுவனங்களில் அசென்ட் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், மாஸ்க் டிரான்ஸ், டி.எஸ்.எம்.டி குளோபல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபுட்ரெவோ ஆகியவை அடங்கும்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, அசென்ட் ஏவியேஷன் மார்ச் 2023 முதல் மார்ச் 2024 வரை ரஷ்யாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கு 700-க்கும் மேற்பட்ட ஏற்றுமதிகளை அனுப்பியுள்ளது. இதில் சுமார் 2 லட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள பொருட்களும் அடங்கும்.
அசென்ட் ஏவியேஷனுடன் தொடர்புடைய இரண்டு இந்தியர்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
அவர்களின் பெயர்கள் விவேக் குமார் மிஸ்ரா மற்றும் சுதிர் குமார். அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, அவர்கள் இருவரும் அசென்ட் ஏவியேஷன் உடன் தொடர்புடையவர்கள்.
மற்றொரு இந்திய நிறுவனமான மாஸ்க் டிரான்ஸ், ஜூன் 2023 மற்றும் ஏப்ரல் 2024 க்கு இடையில் $300,000 மதிப்புள்ள பொருட்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. விமானப் போக்குவரத்து தொடர்பான பணிகளில் ரஷ்யாவால் அவை பயன்படுத்தப்பட்டன.
டி.எஸ்.எம்.டி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரஷ்ய நிறுவனங்களுக்கு 4.30 லட்சம் டொலர் மதிப்புள்ள பொருட்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு மின்னணு ஒருங்கிணைந்த சுற்று, ஒரு மைய செயலாக்க அலகு மற்றும் பிற நிலையான மின்தேக்கிகள் அடங்கும்.
மற்றொரு நிறுவனமான ஃபுட்ரெவோ ஜனவரி 2023 முதல் பிப்ரவரி 2024 வரை ரஷ்யாவுக்கு 1.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US sanctions, US sanctions 19 Indian firms aiding Russia, USA Russia India China, Russia Ukraine War