கொடூர ஒடுக்குமுறைக்கு பதிலடி... ஈரான் மீது பாய்ந்த அமெரிக்காவின் நடவடிக்கை
ஈரான் தொடர்பாக அமெரிக்கா புதிய தொடர் தடைகளை விதித்துள்ளது. ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதிகளை முன்னெடுக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் சட்டத்திற்கு புறம்பான கப்பல்களை இந்தத் தடைகள் இலக்கு வைத்துள்ளன.
ஈரானிய எண்ணெய்
ஈரானில் போராட்டக்காரர்கள் மீது அரசாங்கம் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஒன்பது எண்ணெய் கப்பல்கள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாக நிறுவனங்கள் மீதான தடைகளை அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தடை விதிக்கப்பட்டுள்ள இந்த ஒன்பது கப்பல்களும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கூட்டாக வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விநியோகம் செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஏற்றுமதிகளிலிருந்து கிடைக்கும் வருமானம் பிராந்திய பயங்கரவாத முகவர்கள், ஆயுதத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அறிக்கை ஒன்றில், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குறிப்பிடுகையில், ஈரான் அரசாங்கம் திருடியதும், ஈரானுக்கு வெளியே உள்ள வங்கிகளுக்கு அவசரமாகப் பரிமாற்றம் செய்ய முயற்சிப்பதுமான கோடிக்கணக்கான டொலர்களை கருவூலத் துறை தொடர்ந்து கண்காணிக்கும் என பதிவு செய்துள்ளார்.
ஈரானில் விலைவாசி உயர்வைக் கண்டித்து தெஹ்ரானில் உள்ளக் கடைக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், பின்னர் திடீரென்று நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக வெடித்தது.

கடுமையான தண்டனை
இரண்டு வாரங்கள் நீடித்த இந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளால் 3,117 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், போராட்டங்களின் போது 4,519 பேர்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் 4,251 பொதுமக்கள், 197 பாதுகாப்புப் பணியாளர்கள், 18 வயதுக்குட்பட்ட 35 பேரும், போராட்டக்காரர்களோ அல்லது பாதுகாப்புப் படையினரோ அல்லாத 38 வழி போக்கர்களும் அடங்குவர் என்று கூறியுள்ளது.

மட்டுமின்றி, போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஈரான் உறுதியளித்திருந்தது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை அடுத்து ஈரான், போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |