ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் முடிவால் பாதிக்கப்படவுள்ள ஐரோப்பிய நாடு
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதிக்கப்படவுள்ள பொருளாதார தடையால் ஐரோப்பிய நாடொன்று கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவிருக்கிறது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள செர்பியாவின் (Serbia) முக்கிய எரிவாயு சப்ளையர் நிறுவனத்திற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று செர்பியாவின் ஜனாதிபதி சனிக்கிழமை தெரிவித்தார்.
தடைகள் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று செர்பியாவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் (Aleksandar Vucic) தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை அமெரிக்காவிடமிருந்து தொடர்புடைய எந்த ஆவணங்களையும் அவர் பெறவில்லை என்றார்.
சேர்பியா கிட்டத்தட்ட முற்றிலுமாக ரஷ்ய எரிவாயுவை நம்பியுள்ளது, அதனை அண்டை நாடுகளில் உள்ள குழாய்கள் மூலம் பெறுகிறது.
இந்த எரிவாயு பின்னர் Petroleum Industry of Serbia (NIS) மூலம் விநியோகிக்கப்படுகிறது, இது ரஷ்யாவின் அரசு எண்ணெய் நிறுவனமான Gazprom Neft-க்கு பெரும்பான்மையாக சொந்தமானது.
இந்நிலையில், தடை விதிக்கும் ஆவணங்களைப் பெறுவதற்கு பிறகு அமெரிக்காவுடனும் ரஷியாவுடனும் ஆலோசனை நடத்துவோம் என அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷியாவுடனான நட்பு உறவுகளை பாதுகாப்பதோடு, தடை விதிக்கும் நாடுகளுடனும் உறவுகளை காப்பாற்ற முயற்சிப்பதாக கூறினார்.
செர்பியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சியில் இருந்தாலும், உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளில் இணையாமல் இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Serbia, Russia faces US sanctions