அமெரிக்கா-வெனிசுலா இடையே அதிகரிக்கும் பதற்றம்: 6 எண்ணெய் டேங்கர் கப்பல் மீது பொருளாதார தடை
வெனிசுலா மீதான தனது நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
எண்ணெய் டேங்கர்கள் மீது பொருளாதார தடை
வெனிசுலா மற்றும் அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் நிர்வாகத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது வெனிசுலாவில் இருந்து எண்ணெயை கொண்டு செல்லும் கூடுதலாக 6 டேங்கர் கப்பல்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

நேற்றைய தினம் வெனிசுலா கடற்கரையில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்க ராணுவம் கையற்றியதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் கிடைத்த தகவல்கள் படி, அமெரிக்க படைகளால் கைப்பற்றப்பட்ட டேங்கர் கப்பலானது ஸ்கிப்பர்(Skipper) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகள் எண்ணெய் கப்பல்கள் மீது மட்டும் இல்லாமல் ஜனாதிபதி மதுரோவின் உறவினர்கள் மீதும் அவர்களின் வணிகங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |