சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா அணு ஒப்பந்தம் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே புதிய அணு ஒப்பந்தம் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக குடிமக்கள் பயன்பாட்டிற்கான அணு ஆற்றல் திட்டங்களை உருவாக்க அனுமதி கிடைக்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள் சவுதி நிலப்பரப்பில் அணு மின் நிலையங்களை இயக்கும் வகையில் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவுக்கு தானாகவே யுரேனியத்தை செறிவூட்டும் (enrich) அதிகாரமும் வழங்கப்படலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.
இது, 2009-ல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திலிருந்து மாறுபட்டதாகும். அப்போது அமீரகத்திற்கு தானாக எரிபொருள் தயாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகள் இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு எதிர்காலத்தில் அணு ஆயுதம் உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளன.
எனினும், அமெரிக்கா இந்த ஒப்பந்தம் முழுக்க குடிமக்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே என வலியுறுத்துகிறது.
2008-ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா-சவுதி இடையே அணு ஆற்றல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. பல தடைகள் இருந்தபோதிலும், தற்போது இரு நாடுகளும் வணிக ரீதியான ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆற்றல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |