ஈரானை நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை வீசிய அமெரிக்கா
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, ஈரானை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போட்ஸ்வானாக் கொடியுடன்
குறித்த தகவலை அமெரிக்க மத்திய கட்டளை பீடம் உறுதி செய்துள்ளது. போட்ஸ்வானாக் கொடியுடன் காணப்பட்ட எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை வீசியதாகவும், அதன் குழுவினர் தொடர்ச்சியான எச்சரிக்கைகளைப் புறக்கணித்தன் காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று எண்ணெய் கப்பல் தாக்கப்பட்டதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்றையும் கட்டளை பீடம் வெளியிட்டது.
ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களுக்குமான தனது முற்றுகையை அமெரிக்க இராணுவம் ஏப்ரல் 13 அன்று அமுல்படுத்தத் தொடங்கியது.
122 கப்பல்கள்
இந்த நிலையில், போட்ஸ்வானா கொடியுடன் சென்ற லெக்ஸி கப்பல், கார்க் தீவை நோக்கி சர்வதேச கடல்வழிப் பாதையில் பயணித்தபோது, அமெரிக்கப் படைகள் அதன் மீது முற்றுகை நடவடிக்கைகளை அமுல்படுத்தியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.
மேலும், 24 மணி நேர காலப்பகுதியில், கப்பலின் பணியாளர்கள் அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தலுக்குப் பலமுறை பின்பற்றத் தவறியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, முற்றுகை நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஆறு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன என்றும், மேலும் 122 கப்பல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன என்றும் சென்ட்காம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |