100 நாட்களாக முடக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி: CENTCOM வெளியிட்ட தகவல்
கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றிகையை தொடர்ந்து கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கி இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு(CENTCOM) தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இதன் மூலம் கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

X-யில் இது குறித்து CENTCOM வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க படைகளின் இந்த முற்றுகை நடவடிக்கையின் மூலம் ஈரானின் ஆயுதக் குழுக்கள், குற்றவியல் வலையமைப்புகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் திறன் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையால் அனுமதிக்கப்பட்ட சில மனிதாபிமான உதவிகளை தவிர ஈரானுக்கு இந்த காலகட்டத்தில் வேறு எந்தவொரு கடல்வழி ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ நடைபெறவில்லை என CENTCOM சுட்டிக்காட்டியுள்ளது.