பள்ளி வகுப்பறையில் புகுந்த மலை சிங்கம்! பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ காட்சி
அமெரிக்காவில் வகுப்பறையில் மலை சிங்கம் ஒன்று ஊடுருவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் Pescadero நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 மாத மலை சிங்கம் ஒன்று நுழைந்தது. ஆனால் மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதுகாப்பது காரணங்களுக்காக சிங்கத்தை உள்ளேயே வைத்து பள்ளி பூட்டப்பட்டது. பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சிங்கக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டு ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
NBC Bay Area reporter Stephanie Magallon
அப்பகுதிதியில் பள்ளியை ஒட்டிய பகுதிகளில் மலை சிங்கங்கள் நடமாடுவது சகஜம், ஆனால் வகுப்பறைக்குள் விலங்குகள் வராது என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இந்த சிங்கக்குட்டி எப்படியோ பள்ளிக்குள் நுழைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.
என்ன நடந்தது என்பதை விளக்க ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை ட்விட்டரில் பதிவிட்டது, மேலும் அந்த மலை சிங்கம் எடுத்துச் செல்லப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது.
அதில், மலைச் சிங்கம் ஒரு வகுப்பறையில், ஆசிரியர் மேசையின் கீழ் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை சிங்கத்தை மயக்கி கொண்டு வர CaliforniaDFW அமைப்பு அழைக்கப்பட்டது.
இங்கே எங்கள் கால்நடை மருத்துவமனையில், மருத்துவர் ஹெர்மன் மற்றும் அவரது குழுவினர் மலை சிங்கத்தை பரிசோதித்தனர். அதற்கு பல் முறிந்துள்ளது, அதை அகற்ற வேண்டும்... ஓக்லாண்ட் மிருகக்காட்சிசாலை மற்றும் கலிபோர்னியா மீன் மற்றும் வனவிலங்குகளின் விருப்பப்படி அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்காவில் சிங்கம் வைக்கப்படும். அதுவரை அதை இங்கேயே பார்த்துக்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளது.
We just received another rescued mountain lion. This 6-8 month old male was discovered at Pescadero High School. (Students and staff were safe and had been dismissed from school at the time).
— Oakland Zoo (@oakzoo) June 2, 2022
(thread) pic.twitter.com/fo5ZSXO0HT
இந்த வாரம் அதே பள்ளியில் பல மாணவர்களுக்கு பட்டமளிப்பு வாரமாக இருக்க வேண்டும் என்பதால் திட்டமிட்ட பள்ளி நடவடிக்கைகளில் மலை சிங்கம் ஊடுருவியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அந்த பணிகளை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.