ஜோ பைடன் பாதுகாவலரிடமே திருடர்கள் கைவரிசை
வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சில திருடர்கள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கும் இரகசிய சேவை (U.S. Secret Service) அதிகாரியிடமே கைவரிசையை காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி ஜோ பைடன் கலிபோர்னியா சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பங்கேற்றது தெரிந்ததே.
இந்த விஜயத்தின் போது, அமெரிக்க இரகசிய சேவை மற்றும் உள்ளூர் பொலிசார் ஜனாதிபதியின் பாதுகாப்பை கவனித்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு ரகசிய ஏஜென்ட்டை வழியில் சில குண்டர்கள் வழிமறித்து கொள்ளையடித்தனர்.
Tustin பகுதியில் துப்பாக்கி முனையில் வைத்து அவரது பையை எடுத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தை ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மௌனி உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவத்தில் அந்த ரகசிய ஏஜென்டும் தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டார். குற்றவாளிகளை தேடிவருவது தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Joe Biden, Tustin, U.S. Secret Service