ரஷ்ய கோடீஸ்வரரின் சொகுசுப் படகை கைப்பற்றிய அமெரிக்கா!
ரஷ்ய கோடீஸ்வரருக்கு சொந்தமான 300 மில்லியன் டொலர் மதிப்பிலான சொகுசு கப்பலை அமெரிக்கா கைப்பற்யுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் கடந்த மாதம் பிஜியில் கைப்பற்றப்பட்ட ஒரு சூப்பர் சொகுசுப்படகு, இப்போது ஹவாய் வந்தடைந்துள்ளது என்று Refinitiv Eikon கப்பல் கண்காணிப்பு தரவு காட்டுகிறது.
சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்த Amadea சொகுசுப்படகு ரஷ்ய தொழிலதிபர் சுலைமான் கெரிமோவுக்கு (Suleiman Kerimov) சொந்தமானது.
உக்ரைனில் நடக்கும் போரினால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில், அமெரிக்க நீதித்துறையின் கிளெப்டோ கேப்சர் பணிக்குழு, ரஷ்ய தொழிலதிபர்களின் படகுகள் மற்றும் பிற சொகுசு சொத்துக்களை கைப்பற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளது.
106-மீட்டர் (350-அடி) நீளமுள்ள அந்த சொகுசுப்படகு கடந்த வாரம் பிஜியின் லாடோகா துறைமுகத்தை விட்டு வெளியேறியது. பிஜியின் உச்ச நீதிமன்றம், அதை பராமரிக்க அரசாங்கத்திற்கு விலை அதிகம் என்பதால் அந்த படகு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
வியாழன் மதியம் ஹொனலுலுவில் கப்பல் நிறுத்தப்பட்டதை Refinitiv-ன் தரவு காட்டுகிறது.
படகு உரிமையாளரின் வழக்கறிஞர்கள் பிஜி நீதிமன்றத்தில், அமடேயா படகு கெரிமோவ் என்பவருக்குச் சொந்தமானது அல்ல என்றும், மற்றொரு தடை விதிக்கப்படாத ரஷ்ய தொழிலதிபர், முன்னாள் ரோஸ்நேப்ட் தலைவர் எட்வார்ட் குடைனாடோவ் என்பவருக்குச் சொந்தமானது என்றும் கூறினார். ஆனால், கெரிமோவ் தான் சொகுசுப்படகின் அமேடியாவின் உண்மையான உரிமையாளர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.
சிரியா மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் 2014 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் கெரிமோவ் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டார்.
அவருக்கு ஐரோப்பிய ஒன்றியமும் தடை விதித்து. பொது கப்பல் தரவுத்தள Equasis-ன் படி, அமடியா முன்பு கேமன் தீவுகளின் கொடியின் கீழ் பயணம் செய்தது.
ஆனால் அது இப்போது, அமெரிக்கக் கொடியைப் பறக்கவிட்டபடி ஹவாயில் வந்ததைக் காட்டியதாக Refinitiv Eikon கப்பல் கண்காணிப்பு தரவு காட்டுகிறது.