அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா?
பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கிக்கு AMRAAM ஏவுகணையை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்கா துருக்கிக்கு AIM-120C-8 AMRAAM (Advanced Medium-Range Air-to-Air Missiles) ஏவுகணைகள் விற்க ஒப்புதல் வழங்கியது இந்தியாவிற்கு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
225 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், AMRAAM ஏவுகணைகளுடன் தொழில்நுட்ப உதவிகள், பயன்பாட்டு உபகரணங்கள், மென்பொருள் மற்றும் பராமரிப்பு சேவைகளையும் உள்ளடக்கியது.
இந்நிலையில் இந்தியாவின் கவலையின் காரணம் என்ன?
துருக்கியின் பாகிஸ்தானுடன் பலமடைந்த ராணுவ மற்றும் ராஜதந்திர உறவுகளே முக்கிய காரணம். 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட பாலகோட் தாக்குதலின் அடுத்த நாள் பாகிஸ்தானின் F-16 விமானங்கள் இந்தியா மீது AMRAAM ஏவுகணைகளை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது.
இந்த அமெரிக்க ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு நேரடியாக வழங்கப்படவில்லை என்றாலும், அவை துருக்கி வழியாக சென்றிருக்கலாம் என்பதே இந்தியாவிற்கு பிரச்சினை.
துருக்கி ஏற்கனவே பாகிஸ்தானுக்கு Songar மற்றும் Yiha ரக ட்ரோன்களை வழங்கியுள்ளது. மேலும் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் துருக்கி, பாகிஸ்தான் நிலைப்பாட்டை ஆதரித்து வருகிறது.
இந்தியாவின் எதிர்வினை
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் NATO கூட்டமைப்புக்கு ஆதரவாக அமையலாம் என்றாலும், இந்தியாவின் பிராந்திய அக்கறைகளை புறக்கணிக்க முடியாது. இந்தியா தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்த்துவரும் நிலையில், இத்தகைய ஒப்பந்தங்களில் இந்தியாவின் அக்கறைகளை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US Turkey AMRAAM missile deal, India concern over Turkey Pakistan ties, AMRAAM missile sale 2025, Turkey Pakistan defence cooperation, India US defence relations, AMRAAM F-16 India Balakot, Erdogan supports Pakistan, India Turkey tension missile