3 கப்பல்களில் 2200 அமெரிக்க வீரர்கள்: மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க படைகள்
ஈரானுடனான போரை அடுத்து மத்திய கிழக்கிற்கு கிட்டத்தட்ட 2,200 அமெரிக்க கடற்படை வீரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2,200 அமெரிக்க கடற்படை வீரர்கள்
ஈரானுடனான போர் நடவடிக்கையை தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு நோக்கி ஜப்பானை தளமாக கொண்ட 31 வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் கட்டளையகத்தின் கீழ் இயங்கும் இந்த சிறப்பு 31வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட் பிரிவு, தற்போது சுமார் 3 கப்பல்களில் கிட்டத்தட்ட 2200 அமெரிக்க வீரர்களை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி வைத்துள்ளது.

பசிபிக் பிராந்தியத்தில் இருந்து ஒரு படைப்பிரிவு திடீரென மாற்றப்பட்டது உலக நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்து: 6 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பத்திரமாக தரையிறங்கிய KC-135 விமானம்
படைகள் திருப்பி விடப்பட்டு இருந்தாலும் ஈரானில் தரைவழிப் போர் குறித்த எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதே சமயம் நெருக்கடி காலங்களில் விரைந்து செயல்பட்டு, தலைவர்களுக்கு மல்டி டாஸ்கிங் வசதியை வழங்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது.
31 வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட்டின் தொழில்நுட்பம்
அமெரிக்காவின் 31 வது மரைன் எக்ஸ்பெடிஷனரி யூனிட் சிறந்த போர் விமானங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டுள்ளது.
5ம் தலைமுறை மறைந்து தாக்கும் போர் விமானம் F-35 லைட்னிங் II மற்றும் ஹெலிகாப்டரை போல் செங்குத்தாக எழும்பும் V-22 Osprey போர் விமானம் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |