உக்ரைனுக்கு 2 ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா!
அமெரிக்கா உக்ரைனுக்கு மேற்பரப்பில் இருந்து தாக்கக்கூடிய 2 ஏவுகணை அமைப்புகளை அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கான அதன் சமீபத்திய ஆயுதப் பொதிகளின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு இரண்டு NASAMS ஏவுகணை அமைப்புகள், நான்கு கூடுதல் எதிர்ப்பு பீரங்கி ரேடார்கள் மற்றும் 150,000 ரவுண்டுகள் 155 மிமீ பீரங்கி வெடிமருந்துகளை அனுப்புகிறது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
வியாழன் அன்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் கவனம் செலுத்த தீர்மானித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு சுமார் 820 மில்லியன் டொலர் மதிப்பிலான உதவிப் பொதியை வழங்குவதாக அறிவித்தார்.
இதையும் படியுங்கள்: கனவில் கண்ட எண்கள்., லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற நபர்!
அதனைத் தொடர்ந்து, வெள்ளியன்று கூடுதல் விவரங்களை வழங்கிய பென்டகன், பைடனின் அறிவிப்பை முறைப்படுத்தியது. மேலும், உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவியில் ஹை மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகளுக்கான (HIMARS) கூடுதல் வெடிமருந்துகளும் அடங்கும் என்று கூறியது.
அமெரிக்காவின் இந்த கூடுதல் உதவிகள், ரஷ்ய பீரங்கிகளின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைனை வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
இதையும் படியுங்கள்: 2,000 டொலர் லொட்டரி வென்றதாக நினைத்த டிரக் டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்!
பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து ஐரோப்பாவிற்கு முழு அளவிலான போரை மீண்டும் கொண்டு வந்ததில் இருந்து, அமெரிக்கா இப்போது வரை தோராயமாக 6.9 பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது.