அமெரிக்கா வழங்கிய 2000 பவுண்டு வெடிகுண்டுகள்: இஸ்ரேல்-ஹமாஸ் பதற்றம் அதிகரிப்பு
காசா போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் அமெரிக்காவிடம் இருந்து அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்றுள்ளது.
2000 பவுண்டு எடையுள்ள குண்டுகள்
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 2,000 பவுண்டுகள் எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த MK-84 குண்டுகளைப் பெற்றுள்ளது.
கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் பதட்டமான சூழ்நிலை நிலவும் வேளையில் இந்த கப்பல் போக்குவரத்து வந்துள்ளது.
MK-84 குண்டுகளின் திறன்
அமெரிக்காவின் இந்த MK-84 என்பது வழிகாட்டப்படாத குண்டு ஆகும்.
இவை தடிமனான கான்கிரீட் மற்றும் உலோகத்தை துளைத்துச் செல்லக்கூடியது. அத்துடன் இது வெடித்த இடத்தில் பரந்த வெடிப்பு ஆரத்தை ஏற்படுத்துகிறது.
இவை முதலில் ஜோ பைடன் அரசாங்கத்தால் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது, ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை அடுத்து இந்த தடையை நீக்கி அவர் உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |