ஏவுகணை சோதனை நடத்திய ஈரான் - 50 போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா
ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அமெரிக்கா மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியுள்ளது.
ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தை
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் 2ஆம் கட்ட மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பொருளாதார தடைகளை நீக்கினால் மட்டுமே அணுசக்தி கட்டுப்பாட்டிற்கு ஒப்புக்கொள்வோம் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டங்களையும் ஈரான் கைவிட அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை எனவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி தெரிவித்துள்ளார்.
ஈரான் ஏவுகணை சோதனை
இந்த முறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அது ஈரானுக்கு மோசமான நாளாக அமையும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்திருந்தார்.
டிரம்பிற்கு பதிலடியாக, "உலகின் வலிமையான இராணுவம் கூட சில நேரங்களில் கடுமையான அடி வாங்கி மீண்டும் எழ முடியாமல் தவிக்கும்" என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
The US President keeps saying that they have the strongest military force in the world. The strongest military force in the world may at times be struck so hard that it cannot get up again.
— Khamenei.ir (@khamenei_ir) February 17, 2026
இந்த சூழலில், உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய நீர்வழியான ஹார்மோஸ் நீரிணையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பிரம்மாண்ட போர்ப் பயிற்சியை நடத்தி வருகிறது.
🚨 BREAKING:
— Mario Nawfal (@MarioNawfal) February 17, 2026
🇺🇸🇮🇷 Multiple reports say the USS Gerald R. Ford has been officially deployed to the Middle East.
However, the deployment has not yet been independently confirmed.
Yesterday, the U.S. aircraft carrier entered the Strait of Gibraltar.pic.twitter.com/9JYMavoILr https://t.co/pmG8z9yGfu
இதன் ஒரு பகுதியாக நேற்று ஈரான் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
Firing anti-ship missiles in the Strait of Hormuz in preparation for war with the US. pic.twitter.com/i02r5cFSpF
— Iran Military Daily (@Iranmilitary24) February 17, 2026
போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா
இதனையடுத்து, F-22, F-35 மற்றும் F-16 உட்பட 50 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா மத்திய கிழக்கை நோக்கி அனுப்பியுள்ளது. மேலும் பல வான்வழி எரிபொருள் நிரப்பும் டேங்கர்களையம் அனுப்பியுள்ளது.
BREAKING:
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) February 17, 2026
🇺🇸🇮🇷 Over 50 U.S. fighter jets, including F-35s, F-22s, and F-16s, have been sent to the Middle East within 24 hours. pic.twitter.com/2GsoPaYBWj
மேலும், உலகின் மிகப்பெரிய போர் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழு கரீபியன் கடற்ப்பரப்பில் இருந்து மத்திய கிழக்கை நோக்கி விரைந்து வருகிறது. இதனுடன் 3 ஏவுகணை அழிப்பான்கள் வந்து கொண்டுள்ளன.
The US aircraft carrier USS Gerald R. Ford and its strike group have entered the Strait of Gibraltar and are now heading toward the Mediterranean Sea. pic.twitter.com/61pxwTPvjj
— IdostandwithIsrael🇮🇱 Israel news (@idostandwithIL) February 18, 2026
ஏற்கனவே 90 விமானங்கள் மற்றும் 3 ஏவுகணை அழிப்பான்களுடன் கூடிய USS ஆபிரகாம் லிங்கம் விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய கிழக்கில் நிலை நிறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |