கால்சட்டைக்குள் 60 பாம்புகளை மறைத்து விமானத்தில் கடத்த முயன்ற நபர்! 25 ஆண்டுகள் சிறை
கால்சட்டைக்குள் பாம்புகள் மற்றும் பல்லிகள் என 60 ஊர்வன விலங்குகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற அமெரிக்கர் விமான நிலையித்தில் பிடிபட்டார்.
வெவ்வேறு நாடுகளிலுருந்து அமெரிக்காவிற்கு 1700 விலங்குகளை இதுபோல் சட்டவிரோதமாகா கடத்த திட்டமிட்டிருந்தார்.
750,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள (இலங்கை ரூ. 27 கோடி) ஊர்வன கடத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாம்புகள் மற்றும் பல்லிகளை தனது கால்சட்டையில் மறைத்து வைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயன்ற ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் ஜோஸ் மானுவல் பெரெஸ் (Jose Manuel Perez) என்ற நபர் இந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த ஒரு விமானத்தில், தனது கால்சட்டையில் பாம்புகள், பள்ளிகள் என 60-க்கும் மேற்பட்ட ஊர்வன விலங்குகளை மறைத்துவைத்து கடத்த முயன்றபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் மெக்சிகோ மற்றும் ஹொங்ஹொங் வழியாக ஆறு வருடங்களுக்குள் 1,700 விலங்குகளை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கடத்தும் மிகப்பெரிய சதித்திட்டத்தின் மாஸ்டர்மைண்ட் என்பது தெரியவந்தது.
அவர் அளித்த வாக்குமூலத்தில், சில சமயங்களில் அவரே விலங்குகளை பல வழிகளில் கடத்தியுள்ளதாகவும், மற்ற நேரங்களில் சிலரிடம் பணம் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் விலங்குகளை மைத்துவைத்து பெட்டிகள் அல்லது லக்கேஜ்கள் மூலம் கடத்தியுள்ளதாகவும் ஒப்புக்கொண்டார்.
அவர், இதுவரை Yucatan box ஆமைகள், Mexican box ஆமைகள், இளம் முதலைகள் மற்றும் Mexican beaded பல்லிகள் உட்பட அமெரிக்க முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 739,000 டொலர்களுக்கும் அதிகமாக விற்றுள்ளதாக கூறினார்.
அவர் தனது செல்லப் பிராணியான பல்லிகளை தனது பொக்கெட்களில் எடுத்துச் செல்வதாக முதலில் சுங்க முகவர்களிடம் கூறியுள்ளார், அதன்பிறகு அவ்ரமிது சந்திக்க எழுந்த நிலையில், அவரையும் அவரது பெட்டிகளையும் சோதனை செய்த்தபோது 60 விலங்குகளை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றில் arboreal முதலை பல்லிகளும், Isthmian dwarf boas பாம்புகளும் இருந்தன. Isthmian dwarf boas தனது நிறத்தை மாற்றும் மற்றும் அதன் கண்களில் இருந்து இரத்தத்தை வெளியேற்றி ஒரு தற்காப்பு வடிவமாக பயன்படுத்தும் ஒரு அரிய வகை பாம்பு.
அவர் கடத்த முயறன்றத்தில் மூன்று ஊர்வன விலங்குகள் இறந்து கிடந்தன.
அவரது வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், பெரெஸ் இரண்டு கடத்தல் குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு அவருக்கு டிசம்பர் 1 அன்று தண்டனை கிடைக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்றோன்றுக்கு வனவிலங்கு கடத்தல் குற்றத்திற்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.