இறந்தவரின் பெயரில் வந்த கடிதம்! படித்து பார்த்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. ஒரு ருசிகர சம்பவம்
அமெரிக்காவில் இறந்தவர் பெயரில் 76 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்ட கடிதம் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வந்தவர் John Gonzalez. இவர் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் அமெரிக்க ராணுவத்துக்காக ஜெர்மனியில் போரிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் போர் முடியும் காலகட்டத்தில் தனது 22வது வயதில் தனது தாய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புக்குரிய அம்மா.. தங்களின் கடிதம் கிடைத்தது. அங்கு அனைவரும் நலமாக இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
நானும் இங்கு நலமாகவே இருக்கிறேன். இங்கு உணவு மட்டும் தான் ஒரே குறையாக உள்ளது. உங்களை விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன். அன்புடன்-உங்கள் மகன் John என எழுதி இருந்தது. இந்த கடிதம் 1947ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.
சுமார் 76 ஆண்டுகள் கழித்து இந்த கடிதம் John அவர்களின் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அதனை ஜானின் குடும்பத்தினர் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்டனர். ஆனால் இந்த கடிதத்தை எழுதிய John Gonzalez கடந்த 2015ஆம் ஆண்டு இறந்துவிட்டார்.
இது குறித்து அவரின் மனைவி Angelina Jolie கூறியதாவது, இதை என்னால் நம்பவே முடியவில்லை. அவருடைய கையெழுத்தை காண்பது அற்புத உணர்வைத் தருகிறது. அவர் மீண்டும் எனக்குக் கிடைத்துவிட்டதை போலத் தோன்றுகிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.