உக்ரைன் போரில் தவறான தகவலை பரப்பும் அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு
உக்ரைன் போரில் சீனாவின் பங்கு குறித்து அமெரிக்கா "தவறான தகவல்களை" பரப்புகிறது என சீன அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரேன் மீதான போருக்காக சீனாவிடம் இராணுவ உபகரணங்களை ரஷ்யா கேட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்புவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முன்னதாக அமெரிக்க அதிகாரிகள், உக்ரைனுக்கு எதிரான தனது போருக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா சீனாவிடம் கேட்டுள்ளது என்று கூறினர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் சீனாவை குறிவைத்து அமெரிக்கா தவறான நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதற்காக சீனா நேரடியாகக் கண்டனம் செய்ய மறுத்துவிட்டதுகுறிப்பிடத்தக்கது.