ஹவுதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா: ஜே.டி வான்ஸ் தகவல்
US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்
செங்கடலின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இராஜதந்திர ரீதியில் முக்கியமாக அமைந்துள்ள பெரிம்(Perim) தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த பெரிம் தீவானது முக்கியமான சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதையான பாப் எல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இந்த கைப்பற்றல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு முக்கிய ராணுவ பலத்தை பெற்றுத் தந்துள்ளது.

அமெரிக்கா தலையீடு
இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடித் தொடர்புகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
கான்சாஸ் மாகாணத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியை அமெரிக்கா தீவிரமாக கையாண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ் மற்றும் அப்பகுதியை சுற்றி பாதிக்கப்பட்ட மற்ற தரப்பினருடனும் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.