மீதமான சைனீஸ் உணவை சாப்பிட்டு கால்கள், கை விரல்களை பறிகொடுத்த இளைஞர்! எச்சரிக்கை செய்தி
அமெரிக்காவில் 19 வயது மாணவர் மீதமான சீன உணவாயுக்களை சாப்பிட்டதால் தனது இரண்டு கால்கள் மற்றும் காய் விரல்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில், JC என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட 19 வயது மாணவரின் மருத்துவ நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் போஸ்ட்டின் படி , அந்த மாணவர் சீன உணவகத்தில் பகுதி நேர பணியாளராக இருந்தார்.
பணி முடிந்ததும் கடையில் மீதமான சாப்பாட்டையும் கோழி இறைச்சியையும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் வயிற்று வலி, குமட்டல், குளிர், மூச்சுத் திணறல், தலைவலி, மங்கலான பார்வை, நெஞ்சு வலியால் ஆகியவற்றால் பெரும் அவதிக்கு உள்ளானார். மேலும் அவரது தோல் "ஊதா நிறமாக" மாறத் தொடங்கியது என்று நோயாளியின் நண்பர் ஒருவர் கூறினார்.
அவர் சாப்பிட்ட உணவில் உயிருக்கு ஆபத்தான செப்சிஸ் மற்றும் கேங்க்ரீன் பாக்டீரியாக்கள் உருவாகியுள்ளன. அறிக்கையின்படி , அவர் பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (PICU) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலிறக்கம ஏற்பட்டது.
தொடர்ச்சியான இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளுக்குப் பிறகு, நோயாளி Neisseria meningitidis என்ற பாக்டீரியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, 19 வயது இளைஞனின் இரு கால்கள் மற்றும் கை விரல்களும் வெட்டி எடுக்கப்பட வேண்டியிருந்தது.
இந்த சம்பவம் மார்ச் 2021-ல் நடந்தாலும், இந்த வழக்கு கடந்த வாரம் யூடியூபர் சுப்பியேமுவால் பகிரப்பட்ட பின்னர் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
JC தான் உட்கொண்ட உணவை எவ்வாறு சேமித்து வைத்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அறை வெப்பநிலையில் (room temperature) உணவுகளில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரும். எனவே, குளிர்சாதனப்பெட்டி அல்லது உறைவிப்பான் பெட்டியில் சேமிப்பது முக்கியம்.