பாடசாலையில் ஆசிரியர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவி: அதிர்ச்சியூட்டும் காரணம்
அமெரிக்காவிலுள்ள ஒரு பாடசாலையில் வகுப்பறையில் மாணவி ஒருவர், ஆசிரியர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாடசாலையில் பிரச்சனை
அமெரிக்காவிலுள்ள ஆண்டியோச் என்ற உயர் நிலை பள்ளியில், ஆசிரியர் மீது மாணவி பெப்பர் ஸ்ப்ரே அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@twitter
தேர்வின் போது டென்னிசி என்ற மாணவி வகுப்பறையில், அவருடைய போனை பறித்து வைத்ததற்காக ஆத்திரம் அடைந்துள்ளார்.
@gettyimages
இதனை தொடர்ந்து டென்னிசி என்ற அந்த மாணவி ஆசிரியரின் மீது பெப்பர் ஸ்பேரேவை எடுத்து அவரது முகத்தில் அடித்து கொண்டே ‘என்னுடைய போன் வேண்டும்’ என தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்துள்ளார்.
பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவி
மேலும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடுக்க முயன்றும், மாணவி கேட்காமல் தொடர்ந்து பெப்பர் ஸ்ப்ரே அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
Girl pepper sprays teacher because he took her phone from her in Antioch TN. This same teacher two months ago got punched in the face by a different student for taking a kids phone he was using to cheat on a test with it. pic.twitter.com/sc9HTDCqR4
— ₛᵤₛᵢₑ ⋆ ✫ · * ✧ · ˚ . ·* ✺ ˚ (@SusieKxoxo) May 5, 2023
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஆசிரியர்களிடம் மாணவர்கள் இவ்வாறு தவறாக நடந்து கொள்வது ஆபத்தானது என பலரும் விமர்சித்துள்ளனர்.
@reddit
”அடுத்த பத்து வருடங்கள் கழித்து ஒரு ஆசிரியரை இழிவு படுத்தியதற்காக நீங்கள் வெட்கப்படுவீர்கள்” என சமுக வலைத்தளத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவியின் இந்த செயலுக்கு பள்ளி நிர்வாகம் தக்க தண்டனை வழங்க வேண்டும், என பலரும் கோபத்துடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.