இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா

Iran Israel-Iran conflict
By Arbin Mar 04, 2026 04:12 PM GMT
Report

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க நீர்மூழ்கி ஒன்று நீருக்கடியில் டார்பிடோவைப் பயன்படுத்தி ஈரானிய கப்பல் ஒன்றை மூழ்கடித்துள்ளது.

மிகப்பெரிய சாதனை

குறித்த தகவலை அமெரிக்காவின் போர் செயலாளர் பீட் ஹெக்செத் புதன்கிழமை அறிவித்தார். ஈரான் மீது இராணுவம் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருவதாகவும்,

இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா | Us Submarine Torpedo Iranian Warship

அமெரிக்கா தற்போதுதான் ஆட்டத்தைத் தொடங்கியதாகவும் ஹெக்செத் கூறிய நிலையில், இந்த உயர் துல்லியத் தாக்குதல் நடந்துள்ளது. ஈரானுக்கு எதிரானப் போர் தொடங்கிய 100 மணி நேரத்தில் அமெரிக்கா 2,000க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளது.

மேலும், அமெரிக்கா இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், 2024 தேர்தலுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதன் பின்னணியில் செயல்பட்டதாக கூறப்படும் ஒரு உயர்மட்ட ஈரானிய அதிகாரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த அதிகாரி யார் என்பது குறித்த மேலதிக தகவல்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. இதனிடையே, ஹெக்செத் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், நீருக்கடியில் டார்பிடோவைப் பயன்படுத்தி ஈரானிய போர்க்கப்பலை அழித்தது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான்... கப்பல்கள் கொளுத்தப்படும் எனவும் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையை மூடியதாக ஈரான்... கப்பல்கள் கொளுத்தப்படும் எனவும் எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒரு கப்பலை மூழ்கடிப்பது இதுவே முதல் முறை. 1982 ஆம் ஆண்டில், பால்க்லேண்ட்ஸ் போரின் போது, ​​கிரேட் பிரிட்டனின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் HMS கான்குவரர் ஒரு அர்ஜென்டினா கப்பலை டார்பிடோ மூலம் மூழ்கடித்தது.

தற்போது ஈரானுக்கு எதிரான போரில், இந்தியப் பெருங்கடலில் திங்கட்கிழமை டார்பிடோ தாக்குதல் நடந்ததாக ஹெக்செத் கூறியுள்ளார். கப்பலின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இலங்கை அருகே ஒரு ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா | Us Submarine Torpedo Iranian Warship

80 பேர் கொல்லப்பட்டதாக

Mark 48 என்ற டார்பிடோவை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெராத் அறிவித்தார்.

மட்டுமின்றி. ஈரானிய கப்பலில் 180 பேர் இருந்ததாகவும், IRIS Dena என்ற ஈரானியப் போர்க்கப்பல் அது எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த டார்பிடோ தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மட்டுமின்றி, 32 ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர் என்பதையும் இலங்கை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா | Us Submarine Torpedo Iranian Warship

ஈரானிய ஐரிஸ் தேனா கப்பலானது அவர்களின் புதிய போர்க்கப்பல் வரிசைகளில் ஒன்றாகும். அதில் தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், பீரங்கி, இயந்திர துப்பாக்கிகள், டார்பிடோ லாஞ்சர்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

வெளியான தகவல்கலின் அடிப்படையில், இந்தக் கப்பல் பிப்ரவரி 18 முதல் 25 வரை வங்காள விரிகுடாவில் நடந்த கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில், 1945 க்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்க கடற்படையின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, மார்க் 48 டார்பிடோவைப் பயன்படுத்தி எதிரி போர் கப்பலை தாக்கி, கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பியுள்ளது என அமெரிக்காவின் போர் செயலாளர் பீட் ஹெக்செத் பெருமையுடன் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US