அமெரிக்க பாஸ்போர்ட்டில் இனி ஆண், பெண் மட்டுமே! மூன்றாம் பாலினத்தினர் அதிர்ச்சி..ட்ரம்பிற்கு வெற்றி
அமெரிக்க பாஸ்போர்ட்களில் இரண்டு பாலினங்களை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்ற ட்ரம்பின் உத்தரவை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது.
இரண்டு பாலினப் பெயர்கள்
ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க முடியும் என்ற தனது கொள்கைக்கு டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 
அதன் ஒரு படியாக அமெரிக்க பாஸ்போர்ட்களில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினப் பெயர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், மூன்றாம் பாலினத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், உச்ச நீதிமன்றம் வரை இது கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்புக் கொள்கைகளை புண்படுத்தாது
இந்த நிலையில், அமெரிக்க பாஸ்போர்ட்களில் பாலினப் பெயர் பயணிகளின் உயிரியல் பாலினத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீதிமன்றம் கையொப்பமிடாத உத்தரவில், "பிறந்த நேரத்தில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பாலினத்தைக் காண்பிப்பது அவர்களின் பிறந்த நாட்டைக் காண்பிப்பதை விட சமமான பாதுகாப்புக் கொள்கைகளை புண்படுத்தாது - இரண்டு நிகழ்வுகளிலும், அரசாங்கம் யாரையும் வேறுபட்ட சிகிச்சைக்கு உட்படுத்தாமல் ஒரு வரலாற்று உண்மையை மட்டுமே சான்றளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் அரசின் இந்த கொள்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று வாதிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு ஒரு அடியாகும் என்று கூறப்படுகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |