முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையருக்கு விசா தடைகள் விதித்த அமெரிக்கா
ட்ரம்ப் நிர்வாகம் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஒருவர் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் மீது விசா தடைகளை விதித்தது.
ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள்
அமெரிக்க சமூக ஊடக தளங்களை தணிக்கை செய்வதில் ஐரோப்பிய ஒன்றிய ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கு (DSA) எதிராக எதிர்ப்பை உருவாக்குமாறு அமெரிக்கத் தூதர்களுக்கு ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
DSA என்பது வெறுப்புப் பேச்சு, தவறான தகவல் மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், இது கருத்துச் சுதந்திரத்தை நசுக்குகிறது என்றும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் செலவுகளை ஏற்படுத்துகிறது என்றும் ட்ரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
ஐரோப்பிய தலைவர்கள் பேச்சு சுதந்திரத்தை தணிக்கை செய்வதாகவும், குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதாகவும் இந்த மாதம் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு முகமை கூறியதைத் தொடர்ந்து விசா தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேரும்
விசா தடைகளால் குறிவைக்கப்பட்ட ஐந்து பேரும் அமெரிக்க தளங்களை அவர்கள் எதிர்க்கும் அமெரிக்கக் கண்ணோட்டங்களைத் தணிக்கை செய்யவும், பணமதிப்பிழப்பு செய்யவும், அடக்கவும் கட்டாயப்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளனர் என்று வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
இதில் மிகவும் முக்கிய இலக்காக இருந்தவர், 2019 முதல் 2024 வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டுச் சந்தைக்கான ஆணையராகப் பணியாற்றிய பிரெஞ்சு முன்னாள் வணிக நிர்வாகி தியரி பிரெட்டன் ஆவார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'சென்டர் ஃபார் கவுண்டரிங் டிஜிட்டல் ஹேட்' அமைப்பின் பிரித்தானிய தலைமைச் செயல் அதிகாரியான இம்ரான் அகமதுவும் ஒருவர். ஜேர்மனியின் Anna-Lena von Hodenberg மற்றும் Josephine Ballon இவர்கலுடன் Clare Melford என்பவரும் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |