அமெரிக்காவில் ட்ரம்ப் விதித்த வரியை திருப்பித் தரும் திட்டம் தொடக்கம்
அமெரிக்க உச்ச நீதிமன்றம், ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த சில இறக்குமதி வரிகள் சட்டவிரோதம் என தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அந்த வரிகளை திருப்பித் தரும் திட்டம் இந்த வாரம் தொடங்குகிறது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு (CBP) அமைப்பு ஓன்லைன் போர்டல் மூலம் நிறுவனங்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.
இதன் மூலம் Walmart போன்ற பெரிய நிறுவனங்கள் பல பில்லியன் அளவிலான தொகையை மீண்டும் பெற உள்ளன. Walmart மட்டும் சுமார் 10 பில்லியன் டொலர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Costco, Essilor Luxottica போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்காக தனி வழக்குகள் தொடர்ந்துள்ளன. FedEx, UPS போன்ற நிறுவனங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த வரிகளை திருப்பித் தரத் தயாராக உள்ளன.

CBP தரவுகளின்படி, 3.3 லட்சம் இறக்குமதியாளர்கள் மொத்தம் 166 பில்லியன் டொலர் வரி செலுத்தியுள்ளனர். இதில் 56,497 இறக்குமதியாளர்கள் ஏற்கனவே பதிவு செய்து, 127 பில்லியன் டொலர் வரை திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.
சிறு நிறுவனங்களும் தங்கள் கோரிக்கைகளைத் தயாரித்து வருகின்றன. ஆனால், சட்ட நிபுணர்கள், கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர். தவறான தகவல்கள் இருந்தால் முழு கோரிக்கையும் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு நிதி சுமையை குறைக்கும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. ஆனால், இதனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி நன்மை கிடைக்குமா என்பது தெளிவாகவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |