அமெரிக்காவிற்கு தக்க பதிலடி... உயர்மட்டக் கூட்டத்தை நடத்த உள்ள சீனா
அமெரிக்காவுடன் வர்த்தக யுத்தம் அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் சந்தைகளை நிலைப்படுத்துவதற்கும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளனர்.
கூட்டத்திற்கு அழைப்பு
சீன இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகள் கிட்டத்தட்ட இரு மடங்காக 104 சதவீதம் என உயர்ந்துள்ள நிலையிலேயே உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, முன்னெடுக்கப்படும் முதல் பொது உயர்மட்டக் கூட்டம் இதுவாகும்.
மாநில கவுன்சிலின் மூத்த அதிகாரிகள், பல அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஏற்றுமதி வரிச் சலுகைகள் போன்ற முன்முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடியான வரி விதிப்பு பல தசாப்தங்களாக நீடித்து வந்த உலகளாவிய வர்த்தக ஒழுங்கை அசைத்துள்ளன. அத்துடன் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களை அதிகரித்து, உலகளாவிய பங்கு விலைகளை கடுமையாக சரியச் செய்துள்ளது.
ட்ரம்ப் விதித்திருந்த 54 சதவீத வரி விதிப்புக்கு எதிராக சீனா 34 சதவீத பதிலடி வரி விதிப்பு அறிவித்திருந்தது. தற்போது மீண்டும் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி வரையில் போராட முடிவு செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |