ட்ரம்பால் பல பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொள்ளவிருக்கும் ஆசிய நாடொன்றின் மருந்து ஏற்றுமதி
சிங்கப்பூரில் உள்ள மருந்து நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த அதிக வரிகளிலிருந்து விலக்கு பெற தகுதி பெறுமா என்பது குறித்து விளக்கம் கோருவதாக அந்த நாட்டின் துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி
சிங்கப்பூர் பொதுவாக 3.10 பில்லியன் டொலர் மருந்து பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை பிராண்டட் மருந்துகள் என்றும் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
பிராண்டட் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 சதவீத வரிகளை அறிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவில் உற்பத்தியை உருவாக்காத நிறுவனங்களுக்கு இது பொருந்தும் என்றார்.
ஆனால், சிங்கப்பூர் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் மொத்த ஏற்றுமதியில் மருந்துப் பொருட்கள் சுமார் 13 சதவீதமாக இருப்பதால் இது சிங்கப்பூருக்கு ஒரு கவலையாக உள்ளது.
வர்த்தக ஒப்பந்தம்
மேலும், சிங்கப்பூரில் உள்ள பல மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்த அல்லது கட்டமைக்க ஏற்கனவே திட்டங்களைக் கொண்டுள்ளன.
இதனால் அந்த நிறுவனங்கள் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருப்பதாக கிம் யோங் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2004 முதல் தீவு நாட்டோடு ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், சிங்கப்பூரின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 10 சதவீத அடிப்படை வரிக்கு உட்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |