16 வயது மாணவருக்கு நிர்வாண படங்கள் அனுப்பிய 27 வயது ஆசிரியை! பாய்ந்த நடவடிக்கை
அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவர், தனது 16 வயது மாணவருக்கு ஆபாச படங்கள் அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டார். உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மிசிசிப்பியில் (Mississippi) உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் எமிலி ஸ்வின்கோவ்ஸ்கி (Emily Swinkowski). 27 வயதாகும் இவர் வாட்டர் வாலே உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது, நிர்வாணப் புகைப்படங்களை மாணவருக்கு அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த மாணவர் உடனே தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து முறையிட்டார். அதன் பின்னர் அவர் பொலிசாரை தொடர்புகொண்டு எமிலி மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். 50,000 டொலர்கள் பத்திரத்தின் (Bond) விடுவிக்கப்பட்ட எமிலி தனது பணியில் இருந்து விலகினார். தொடர்கதையாகும் துஷ்பிரயோகம் இதுகுறித்து முன்னாள் FBI சிறப்பு முகவர் மற்றும் CIA அதிகாரியான ட்ரேஸி வால்டர் (Tracy Walder) கூறுகையில், 'இளம் வயதிலேயே கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற வழக்குகள் அதிகம் காணப்படுகின்றன. இது மிகவும் மோசமானது' என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இதுபோன்று ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்குவது தொடர்கதையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |