அமெரிக்காவில் 16 வயது மாணவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது
அமெரிக்காவில் 16 வயது மாணவரை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, சிறந்த ஆசிரியர் என விருது பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவருடன் தகாத உறவு
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியிலுள்ள யுசுப்பியா உயர்நிலை பாடசாலையில், ட்ரேசி வாண்டர்ஹல்ஸ்ட் (38) என்ற ஆசிரியை பணிபுரிந்து வந்துள்ளார்.
@twitter
இவர் அந்த பாடசாலையின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை கடந்த 2017ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
இந்நிலையில் 38 வயதான ட்ரேசி வாண்டர்ஹல்ஸ்ட், தனது வகுப்பில் பயிலும் 16 வயது மாணவர் ஒருவரோடு, சட்டவிரோதமாக உடலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆசிரியை கைது
இதனை தொடர்ந்து பொலிஸார் மற்றும் பாடசாலை நிர்வாகம் இணைந்து நடத்திய விசாரணையில், ஆசிரியை மாணவரோடு தகாத உறவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
பின்னர் ட்ரேசி வாண்டர்ஹல்ஸ்ட் என்ற அந்த ஆசிரியை செய்த குற்றத்திற்கான ஆதாரங்களை, சிசிடிவி மூலம் சேகரித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
@google
இந்நிலையில் குற்றவாளியான ட்ரேசி வாண்டர்ஹல்ஸ்ட்டை கைது செய்து, பெர்னார்டினோவில் உள்ள மத்திய குற்றவியல் தடுப்பு மையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
@yuchipia high school
இது குறித்து பேசிய பாடசாலையின் முதல்வர் ‘ ட்ரேசி வாண்டர்ஹல்ஸ்ட் எங்கள் பாடசாலையில் ஒரு சிறந்த ஆசிரியராக இருந்தார்.
அவர் 'எப்போதும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக புதுமையான பல முயற்சிகளை எடுப்பார், மேலும் அவரின் இந்த செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம்’ என கூறியுள்ளார்.