புகையிலை கடையில் கொள்ளை முயற்சி: இந்திய வம்சாவளி நபரை சுட்டுக் கொன்ற டீன் ஏஜ் சிறுவன்
36 வயது இந்திய வம்சாவளி நபரை டீன் ஏஜ் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி நபருக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா நகரில் உள்ள வணிக கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட டீன் ஏஜ் சிறுவன், 36 வயதுடைய இந்திய வம்சாவளி நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2580 விமான நிலைய சாலையில் புகையிலை கடை உரிமையாளரான மைனாங்க் படேல்(Mainank Patel) இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
ரோவன் கவுண்டி ஷெரீப் அலுவலகத்தின் தகவல்படி, நடந்த குற்றத்திற்காக டீன் ஏஜ் சிறுவன் தற்போது காவல் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளி டீன் ஏஜ் சிறுவன் என்பதால் அவரின் பெயர் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மைனாங்க் படேலுக்கு 7 மாத கர்ப்பிணி மனைவி அமி-யும்(Ami), 5 வயது மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |