முன்னாள் காதலி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை: சடலத்துடன் ஹோட்டல் அறையில் இருந்த டீன் ஏஜ் இளைஞர்
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டீன் ஏஜ் இளைஞர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் காதலி கொலை
ஓஹியோவின் பிலோ உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பட்டம் பெற்றதை கொண்டாடுவதற்காக அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள மிர்டில் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அப்போது நடாலி மார்ட்டின் என்ற 18 வயது பெண்ணை அவரது முன்னாள் காதலரான பிளேக் லிங்கஸ் என்ற டீன்ஏஜ் இளைஞர் ஹோட்டல் அறையில் வைத்து கழுத்தை நெரித்து ஜூன் 7ம் திகதி கொலை செய்துள்ளார்.
Facebook/Natalie Martin
மேலும் சில மணி நேரங்கள் வரை உயிரிழந்த பெண்ணின் உடலுடன் ஹோட்டல் அறையை பூட்டி வைத்துக் கொண்டும் உள்ளேயே அந்த இளைஞர் இருந்துள்ளார்.
அத்துடன் தன்னையும் கத்தியால் நெஞ்சில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார் என்பது அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மே 26 திகதி தான் ஓஹியோவில் உள்ள பிலோ உயர்நிலைப் பள்ளியில் இருவரும் பட்டம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இளைஞர்
இதையடுத்து விவரங்கள் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கொலை செய்த டீன் ஏஜ் இளைஞர் பிளேக் லிங்கஸை கைது செய்தனர்.
அத்துடன் சம்பவ இடத்திற்கு அவசர சேவைகளும் அழைக்கப்பட்டு இருந்த நிலையில், கழுத்து நெறிக்கப்பட்டு கிடந்த நடாலி மார்ட்டினை பரிசோதித்தனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக பின்னர் தெரிவித்தனர்.
Facebook/Natalie Martin
இதற்கிடையில் நடாலி மார்ட்டினின் தோழி வழங்கிய தகவலில், இளைஞர் பிளேக் லிங்கஸின் வன்முறையான நடவடிக்கையின் காரணமாக முன்பே இருவரும் காதல் முறிவு செய்து இருந்ததாக தெரிவித்துள்ளார்.