15 வயது யூடியூப் பிரபல மகளின் தாய் மீது அதிர்ச்சி புகார் அளித்த 11 சிறுவர்கள்!
அமெரிக்காவில் 15 வயது யூடியூப் பிரபலத்தின் தாயார் மீது 11 சிறுவர், சிறுமியர் 22 மில்லியன் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரபல யூடியூபர் சிறுமி
அமெரிக்காவைச் சேர்ந்த பிபர் ராக்கெல்லே என்ற 15 வயது சிறுமி பிரபல யூடியூபராக வலம் வருகிறார். 10 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரது சேனலை பின்தொடர்கின்றனர்.
இந்த நிலையில் பிபர் ராக்கெல்லேயின் தாய் டிப்ஃபானி ஸ்மித் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அவர் சிறுவர், சிறுமிகளை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்ததாக 11 பதின்பருவத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
துஷ்பிரயோக குற்றச்சாட்டு
அவர் மீதான புகாரில் குழந்தைகளை ஆபாசமாக்குகிறேன் என்று தற்பெருமை காட்டினார், சிறார்களை 'கவர்ச்சியாக' இருக்க ஊக்குவித்தார், மேலும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@Piper Rockelle/Youtube
அத்துடன், தங்கள் அந்தரங்க உறுப்புகள் குறித்து மோசமாக கருத்து தெரிவித்த ஸ்மித், தங்களின் தனிப்பட்ட கணக்குகளை நாசப்படுத்த கேவலமான தந்திரங்களை கையாண்டதால், பண இழப்பை எதிர்கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அதற்காக 22 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
@piperrockelle/Instagram
150 பக்க புகார்
கடந்த ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்ட 150 பக்கங்கள் கொண்ட புகாரின் மீதான விசாரணை இன்று தொடங்குகிறது.
இதற்கிடையில், ராக்கெல்லே தற்போது வரை வணிகப் பொருட்கள் மற்றும் அவரது தற்போதைய அமெரிக்க சுற்றுப்பயணத்தின் மூலம் பணம் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.