அமெரிக்க பால் பண்ணையில் பயங்கர வெடிப்பு விபத்து: 18,000 பசுக்கள் தீயில் கருகி பலி
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பால் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18,000க்கும் அதிகமான பசுக்கள் உயிரிழந்துள்ளன.
பால் பண்ணையில் வெடி விபத்து
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சவுத் ஃபோர்க் பால் பண்ணையில் ஏப்ரல் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டது, இதனால் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 18,000 பசுக்கள் உயிரிழந்தன.
தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், வெடிப்பு விபத்து ஏற்பட்ட போது பால் கறக்க காத்திருந்த மாடுகள், கொட்டகையில் ஒன்றாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன என தெரியவந்துள்ளது.
HORRIFYING! At least 18,000 individuals were killed in an explosion at a dairy farm in Texas. With no way out, they burned to death. #nomorefactoryfarms #MILK pic.twitter.com/leH6HHXyaO
— Direct Action Everywhere (@DxEverywhere) April 13, 2023
இந்த திடீர் தீ விபத்திற்கான காரணம் இன்னும் தெரிய வராத நிலையில், பண்ணையின் உரிமையாளரும் இந்த சம்பவம் குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை
ஒருவர் மீட்பு
ஷெரீப் அலுவலகத்தின் தகவல்படி, எரியும் கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த ஒருவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
மேலும் காஸ்ட்ரோ கவுண்டி ஷெரீப் அலுவலகம் ஃபேஸ்புக்கில் தீப்பிழம்புகள் எரியும் படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது. ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், கிலோமீட்டருக்கு பாரிய புகைகளின தூண்கள் தோன்றியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
KSAT
அத்துடன் பால் கறக்கும் வசதிக்கு மாடுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அவை அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு தீ நகர்ந்ததை அடுத்து கால்நடைகளில் பெரும்பாலானவை தீயில் கருகி உயிரிழந்தன என ஷெரீப் சால் ரிவேரா உள்ளூர் செய்தி ஆதாரமான கேஎஃப்டிஏவிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து மீத்தேன் மற்றும் அது போன்ற பொருட்கள் பற்றவைக்கப்பட்டு பரவி வெடித்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளன.