தோழியை 27 முறை குத்திக் கொன்ற நபர்: விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை
அமெரிக்காவில் பெண் தோழியை 27 முறை குத்திக் கொன்ற நபருக்கு 60 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை
அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த 35 வயதான ஜமால் மெக்நீல் என்ற நபர் கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி 47 வயதான கேட்டி ஹக் என்ற தன்னுடைய தோழியை 27 முறை கத்தியால் குத்திக் கொன்ற குற்றத்திற்காக 60 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
ஹோட்டல் அறையில் வைத்து பாதிக்கப்பட்ட பெண் இரண்டு முறை இதயத்தில் குத்தப்பட்டத்துடன் சேர்த்து மொத்தம் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக ஹாரிஸ் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் கிம் ஓக் தெரிவித்ததாக செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளியான 35 வயதான ஜமால் மெக்நீல் சம்பவ இடத்திலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது தான் தற்காப்புக்காகவே தாக்கியதாகவும், எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும் ஜமால் மெக்நீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் வழக்கறிஞர் கிம்பர்லி கார்சியாவின் தெரிவித்த தகவலில், கடந்த கால 3 வீட்டு துஷ்பிரயோக தண்டனைகள் உட்பட ஜமால் மெக்நீல் மீது நீண்ட குற்ற வரலாறு இருப்பதால் அவருக்கு 60 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
The Times News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |