ஹார்முஸ் சுங்கக் கட்டணம்... வளைகுடா நாடொன்றிற்கு மீண்டும் மிரட்டல் விடுத்த அமெரிக்கா

Oman Strait of Hormuz
By Arbin May 29, 2026 05:40 AM GMT
Report

ஹார்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டண முறையை அமுல்படுத்த ஓமன் உதவினால், நட்பு நாடென்பதைப் பொருட்படுத்தாமல் ஓமனைத் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடுமையாகக் குறிவைக்கும்

ஹார்முஸ் சுங்கக் கட்டணங்கள் தொடர்பில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் எதிரான தடைகள் குறித்தும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

ஹார்முஸ் சுங்கக் கட்டணம்... வளைகுடா நாடொன்றிற்கு மீண்டும் மிரட்டல் விடுத்த அமெரிக்கா | Us Threatens To Sanction Oman

தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பெசென்ட், குறிப்பாக ஓமான் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நீரிணைக்கான சுங்கக் கட்டணங்களை விதிப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடும் எந்தவொரு நாட்டையும் அமெரிக்க கருவூலம் கடுமையாகக் குறிவைக்கும், மேலும் இதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் யாரேனும் இருந்தால் அவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா உடனான சாத்தியமான ஓர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீரிணையில் சுங்கக் கட்டண முறையை அமுல்படுத்துவது குறித்த ஈரானின் திட்டங்களைக் குறிப்பிட்டு, அத்தகைய முயற்சியை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மிக மோசமான வெப்ப அலைகளை உலகம் எதிர்கொள்ளவிருக்கிறது: எச்சரிக்கும் ஐ.நா

மிக மோசமான வெப்ப அலைகளை உலகம் எதிர்கொள்ளவிருக்கிறது: எச்சரிக்கும் ஐ.நா

இதனிடையே, வியாழக்கிழமை ஓமன் தூதருடன் பேசியதாகவும், ஹார்முஸ் நீர்வழியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்ற உறுதிமொழிகளைப் பெற்றதாகவும் பெசென்ட் பின்னர் வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வழக்கமாக உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்துசெல்லும் இந்த நீரிணை, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியதிலிருந்து ஒரு பதற்றமான பகுதியாக இருந்து வருகிறது.

குறுகிய கால ஏற்பாடு

ஈரானின் பதிலடி நடவடிக்கைகள் இப்பிராந்தியத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதுடன், ஈரான் அந்த நீரிணையை ஏறக்குறைய முற்றிலுமாக முடக்கவும் வழிவகுத்து, உலகளாவிய எரிசக்தி மற்றும் உரங்களின் விலைகளை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.

போருக்கு முன்னதாக, ஜெனீவாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஓமன் மத்தியஸ்தம் செய்தது; அதேவேளை, ஓமனும் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கானது.

ஹார்முஸ் சுங்கக் கட்டணம்... வளைகுடா நாடொன்றிற்கு மீண்டும் மிரட்டல் விடுத்த அமெரிக்கா | Us Threatens To Sanction Oman

புதன்கிழமை அன்று, ஓமனும் ஈரானும் ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் சாத்தியமான குறுகிய கால ஏற்பாடு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஓமன் நிர்வாகம் அவ்வாறு செய்தால் அவர்களைத் தகர்த்துவிடுவதாக கூறி, ஓமானை அச்சுறுத்துவது போல் மிரட்டல் விடுத்தார்.

ஈரான் போர் தொடர்பில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்கா தடுமாறுவதின் பின்னணியில், இஸ்ரேலின் வலுவான கோரிக்கைகள் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதனாலையே, அமெரிக்கா முன்வைக்கும் ஒப்பந்தங்களை ஈரான் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US