சவுதி அரேபியா மீதான முக்கிய தடையொன்றை நீக்கியது அமெரிக்கா
அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியா மீது விதிக்கப்பட்டிருந்த முக்கிய தடையொன்று நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், சவுதி அரேபியாவுக்கு ஆபத்தான ஆயுதங்களை விற்பதற்கான தடையை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் நீக்கியுள்ளது.
இதன்மூலம், மூன்று ஆண்டுகளாக அமுலில் இருந்த தடை முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு துறை, சவூதி அரேபியாவுக்கு Air-to-Ground ஆயுதங்களை மாற்றுவதற்கான தடை சிலவற்றை நீக்கவுள்ளது.
2021-ஆம் ஆண்டில், யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதியின் போரில் சாதாரண பொதுமக்கள் இறந்து கொண்டிருந்தனர். இதை எதிர்த்து அமெரிக்கா சவுதிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தடை விதித்தது.
இதற்குப் பிறகு, 2022 இல் ஐ.நா.வின் மத்தியஸ்தத்துடன், ஏமன் மற்றும் சவுதியில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதையடுத்து அங்கு வான்வழித் தாக்குதலை சவுதி நிறுத்தியது.
ஒப்பந்தத்தின்படி சவுதி அரேபியா தனது பங்கை முடித்துவிட்டதாகவும், இனி நாங்கள் எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்றும் அமெரிக்க அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க சட்டத்தின்படி, எந்தவொரு நாடும் பாரிய ஆயுதங்களை வழங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் இருவரும் யேமனில் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளனர், மேலும் சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்து பல முறை கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸில் போர் தொடங்கியதிலிருந்து இந்த எதிர்ப்பு குறைந்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |