வெளிநாட்டு ஜனாதிபதி ஒருவரின் விசாவை பறிமுதல் செய்யும் அமெரிக்கா
அமெரிக்க வீரர்கள் ட்ரம்பின் உத்தரவுகளை மீற வேண்டும் என்று வலியுறுத்தியதால், கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்யும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் உத்தரவு
நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த பெட்ரோ, ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே திரண்டிருந்த கூட்டத்திடம், அமெரிக்க இராணுவத்தின் அனைத்து வீரர்களும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்ட வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
ட்ரம்பின் உத்தரவுகளை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள் என்றார். இந்த நிலையில், ஜனாதிபதி பெட்ரோ தனது விசாவை இழப்பார் என்று வெளிவிவகார அமைச்சகம் வெள்ளிக்கிழமை மாலை தமது X பக்கத்தில் அறிவித்தது.
ஆனால் அறிவிப்பு வெளியேகும் முன்னரே, ஜனாதிபதி பெட்ரோ அமெரிக்காவில் இருந்து வெளியேறியிருந்தார். இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கொலம்பிய வெளிவிவகார அமைச்சகம் விளக்கமேதும் அளிக்கவில்லை.
ஆனால், போதைப்பொருள் குழுக்களுக்கு எதிரான தாக்குதல் என குறிப்பிட்டு இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக பெட்ரோ குற்றஞ்சாட்டினார்.
ஏன் ஏவுகணை
மேலும், தாக்குதல் நடத்திய அந்த அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும், அது ட்ரம்பாக இருந்தாலும், நடவடிக்கை பாயும் என்றும் பெட்ரோ குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட பயணிகள் அப்பாவிகள் என்றும், அவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். படகைத் தடுத்து நிறுத்தி, அந்த குழுவினரை கைது செய்யும் வாய்ப்பிருந்தும் ஏன் ஏவுகணை என பெட்ரோ கேள்வி எழுப்பியிருந்தார்.
காஸா மீதான போரில் இஸ்ரேலுக்கு எதிரான நிலை எடுத்துவரும் பெட்ரோ, அந்த நாட்டிற்கான நிலக்கரி ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |