அமெரிக்காவில் பிரபலமடையும் “டாப் லெஸ் பணிப்பெண்”… நாள் ஒன்றுக்கு லட்சங்களில் குவியும் வருமானம்
அமெரிக்காவில் மேலாடை இல்லாமல் வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் நாள் ஒன்றுக்கு 1.8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
டாப் லெஸ் பணிப்பெண்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டிக்டாக் ஷாமி, சமீபத்தில் “டாப் லெஸ் பணிப்பெண்” குறித்த தகவலை அவரது தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அமெரிக்காவில் ’டாப் லெஸ்’ கோலத்தில் வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும், இதற்காக அவர் 1 மணி நேரத்திற்கு 300 அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெறுவதாக தெரிவித்துள்ளார்.
This topless maid is paid over $2K per day to clean houses 👀 pic.twitter.com/9pt1MshXqR
— Daily Loud (@DailyLoud) March 7, 2023
இவ்வாறு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 வீடுகளுக்கு அந்த பெண் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகிறாள், மேலும் இது தொடர்பாக அவர் பொதுவெளியில் விளம்பரங்களும் வெளியிட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறு மேலாடை இல்லாமல் பணியில் ஈடுபடும் பெண் தனது தினசரி ஊதியத்துடன் சேர்த்து, தன்னுடைய சுத்தம் செய்யும் பணியில் மனம் மகிழும் வாடிக்கையாளரிடமிருந்து தனியாக டிப்ஸையும் பெற்றுக் கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.
முக்கிய நிபந்தனை
சுத்தம் செய்யும் பணி தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு இருக்கும் இந்த பெண், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தன்னுடைய சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
அத்துடன் இந்த தொழில் ஆபத்து நிறைந்தது என்பதால் சம்பந்தப்பட்ட பெண் பணியாளர், தனது சம்பளத்தில் 30 சதவீதம் செலவு செய்து தனியாக பாதுகாவலரையும் உடன் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.