23 ஆண்டுகளுக்கு பின் வெளியேறும் அமெரிக்கா: முடிவுக்கு வரும் இராணுவ நடவடிக்கை
ஈராக்கில் உள்ள தனது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இராணுவ நடவடிக்கை
ஈராக்கின் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸைனை வீழ்த்த, அமெரிக்கா 2003ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, ஈராக்கில் தமது படைகளை அமெரிக்கா இறக்கியது. அதனைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் சதாம் ஹுசைன் (Saddam Hussain) தூக்கிலிடப்பட்டார்.
இந்த நிலையில், 23 ஆண்டுகள் கழித்து ஈராக்கில் இருந்து அமெரிக்கா தமது அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
23 ஆண்டுகளுக்குப் பிறகு
ஈராக்கின் அனைத்து இராணுவ தளங்களையும் அந்நாட்டு அரசிடம் ஒப்படைப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் அமெரிக்கா தமது படைகளை திரும்பப் பெற உள்ளது.
இதன்மூலம், 2003யில் அமெரிக்கா தொடங்கிய இந்த இராணுவ நடவடிக்கை 23 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக முடிவுக்கு வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |