அமெரிக்காவின் கடமைகளை சுட்டிக்காட்டிய இளவரசர் ஹரி: டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியின் உக்ரைன் பயணம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பிறகு 3 முறையாக உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது அங்கு பேசிய இளவரசர் ஹரி, தன்னை அரசியல்வாதியாக பார்க்க வேண்டாம், தான் ஒரு மனிதாபிமானியாக மற்றும் சேவையின் மதிப்பை அறிந்த நபராக உக்ரைனுக்கு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் பேசிய இளவரசர் ஹரி, உக்ரைன் அணு ஆயுதங்களை கைவிட்ட போது, அதன் இறையாண்மையை காப்பதாக அமெரிக்கா அளித்த உறுதிமொழியை சுட்டிக்காட்டினார்.

இது அமெரிக்காவின் தலைமைக்கான நேரம், அமெரிக்கா தன்னுடைய சர்வதேச ஒப்பந்தத்தை கடைபிடிக்கிறது என்பதை காட்ட வேண்டிய நேரம் என இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பதிலடி

இளவரசர் ஹரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இளவரசர் ஹரி பிரித்தானியாவின் பிரதிநிதி அல்ல, இளவரசர் ஹரியை விட தான் பிரித்தானியாவின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான இந்த மோதல், அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |