அமெரிக்கா-கனடா வர்த்தக போர் தீவிரம்: வரியை இரட்டிப்பாக்கிய ட்ரம்ப்
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு மற்றும் அலுமினியத்திற்கு விதிக்கப்பட்ட வரியை 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
இது வர்த்தக சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த வரி உயர்வு?
ஒன்ராறியோ மாநில முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford), அமெரிக்கா கனடாவுக்கு விதித்துள்ள வரிகளை நீக்காவிட்டால், 1.5 மில்லியன் அமெரிக்க வீடுகளுக்கு வழங்கும் மின்சாரத்துக்கு 25 சதவீத கட்டண உயர்வு அறிவிப்பதாக கூறினார்.
இதற்கு பதிலளிக்கவே ட்ரம்ப், கனடா மீது மேலும் 25 சதவீத வரியை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
கனடாவின் எதிர்வினை
"நாங்கள் ஒரு அடியிலும் பின்னடையப் போவதில்லை" என ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு உறுதிபட தெரிவித்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகும் நிலையில், புதிய பிரதமர் மார்க் கார்னி இன்னும் பதவியேற்காததால், அவர் இதுகுறித்து ட்ரம்ப்புடன் பேச முடியாத நிலை உருவாகியுள்ளது.
தீவிர தாக்கங்கள்
- இதனால் அமெரிக்கா-கனடா பங்குச் சந்தைகள் கடுமையாக பாதிப்பு அடைந்தன
- S&P 500 குறியீடு 1% வீழ்ச்சி, ரொறன்ரோ பங்குச் சந்தை 0.6% குறைவு
- அமெரிக்காவில் அலுமினிய விலை உயர்ந்து, வர்த்தகச் சந்தையில் மிகுந்த பதற்றம் ஏற்பட்டது
- ஏப்ரல் 2-ஆம் திகதி முதல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யும் கார்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும்
இந்த வர்த்தக போர் இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் காலச்செலவு, நுகர்வோர் நம்பிக்கை குறைவு மற்றும் உலகளாவிய சந்தையில் நெருக்கடி அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada US Tariff, US-Canada trade war, Trump doubles tariffs on metals imports