நாட்டின் வளங்களைக் கொள்ளையிடத் துடிக்கும் ட்ரம்ப் அரசாங்கம்... வெனிசுலா பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் மிகவும் தீவிரமான நடவடிக்கையால் லத்தீன் அமெரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்துவதாக வெனிசுலா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கட்டுப்பாட்டைக் கைப்பற்ற
தென்னமெரிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் மிராண்டா, லா குவைரா, அராகுவா ஆகிய மூன்று மாகாணங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை வெனிசுலா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, இந்தத் தாக்குதலின் ஒரே நோக்கம், வெனிசுலாவின் மூலோபாய வளங்களான அதன் எண்ணெய் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதே ஆகும்.
லட்சக்கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தும், சர்வதேசச் சட்டத்தின் அப்பட்டமான மீறல் இதுவென்று குறிப்பிட்டுள்ள வெனிசுலா, ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்தச் செயலைக் கண்டிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்பின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் அத்துமீறிய விமானங்கள், உரத்த சத்தங்கள் மற்றும் குறைந்தது ஒரு புகை மண்டலம் ஆகியவை நேரில் பார்த்தவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அச்சுறுத்தல்
உள்ளூர் நேரம் அதிகாலை 1:50 மணிக்கு இந்த குண்டுவெடிப்புகள் தொடங்கியதாகவும், அவற்றில் ஒன்று வெனிசுலா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் அமைந்துள்ள ஃபோர்ட் டியோனாவை இலக்காகக் கொண்டதாகவும் CNN செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய இராணுவத் தளத்திற்கு அருகில் உள்ள ஒரு நகரத்தின் தெற்குப் பகுதி தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருளில் மூழ்கியுள்ளது.
இச்சம்பவங்களை அடுத்து பல்வேறு சுற்றுப்புறங்களைச் சேர்ந்த மக்கள் தெருக்களுக்கு விரைந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுலா புறந்தள்ளுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ,

வெனிசுலா மக்கள் வீதிக்கு வந்து அமெரிக்காவிற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என கோரியுள்ளார். மேலும், அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்த உத்தரவிட்டதுடன், நாட்டில் வெளிநாட்டு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அறிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |